கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை

 

கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (எ) ஜெயசீலன் (63). இவரது முதல் மனைவி கருப்பாயி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பெரியசாமி தனது மனைவியைப் பிரிந்து கோவை மதுக்கரையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய அவர் நாகர்கோவிலை சேர்ந்த மேரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளில் அவர்களுக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பெரியசாமி தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெரியசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது மகன் சிவக்குமார் (37) என்பவர் கவனித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மனைவிகளை பிரிந்த துக்கம், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெரியசாமி, கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கோவை அரசு மருத்துவமனையில் கத்தியால் தனது கழுத்து மற்றும் கைகளை தனக்குத்தானே அறுத்துக்கொண்டார். இதில் அவருக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.