“ரூ.19 லட்சம் வசூலித்தும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை”… திருப்பூர் தனியார் மருத்துவமனை மீது புகார்!

 

“ரூ.19 லட்சம் வசூலித்தும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை”… திருப்பூர் தனியார் மருத்துவமனை மீது புகார்!

திருப்பூர்

தனியார் மருத்துவமனை ரூ.19 லட்சம் கட்டணம் வசூலித்துவிட்டு, உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், உறவினர்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம் (62). இவருக்கு கடந்த மே 3 ஆம் தேதி கொரோனா உறுதியான நிலையில் பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இணை நோய்கள் இல்லாத சூழலில், ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்ததால் பின்னர் வெலன்டிலேட்டர் படுக்கைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 23ஆம் தேதி சுப்ரமணியம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், சில நாளில் வீட்டிற்கு திரும்பி விடலாம் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில், மறுநாள் காலை ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படுவதாகவும், தங்களிடம் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு வெண்டிலேட்டர் படுக்கை கிடைக்காததால் கடந்த 25ஆம் தேதி சுப்ரமணி உயிரிழந்தார்.

“ரூ.19 லட்சம் வசூலித்தும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை”… திருப்பூர் தனியார் மருத்துவமனை மீது புகார்!

பெருமாநல்லூர் தனியார் மருத்துவமனை 21 நாட்கள் சிகிச்சை அளித்ததற்காக தினந்தோறும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு உள்ளது. ஆனால் சிகிச்சைக்கு உரிய விவரங்கள் அளிக்கவில்லை என கூறபபடுகிறது. மேலும், குணமடைந்து வருவதாக கூறிய அடுத்தநாளே அபாய கட்டத்தில் இருப்பதாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற சொன்னது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சுப்ரமணியத்தின் மகன்கள் ஹரிஹரன், கார்த்திகேயன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட அட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். புகாரின் மீது மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.