உணவு மற்றும் சிகிச்சை அளிக்கவில்லை என போராட்டத்தில் குதித்த கொரோனா நோயாளிகள்!

 

உணவு மற்றும் சிகிச்சை அளிக்கவில்லை என போராட்டத்தில் குதித்த கொரோனா நோயாளிகள்!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆயிரத்துக்கும் மேலாக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

உணவு மற்றும் சிகிச்சை அளிக்கவில்லை என போராட்டத்தில் குதித்த கொரோனா நோயாளிகள்!
இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என கூறி நோயாளிகள் மருத்துவமனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலி, மாவட்டத்தில் இதுவரை 694 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது 386 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு போதிய நேரத்தில் உணவு வழங்கவில்லை என கூறி நோயாளிகள் மருத்துவ மனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு போதிய நேரத்தில் உணவு மற்றும் சிகிச்சை அளிக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.