சென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்..பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்த நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,000ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. அதன் மூலம், அதிகமாக கொரோனா பரவும் 33 பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ttn

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று காலை அவர் தப்பியோடியதால், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்த நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Most Popular

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை...

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை...

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!