ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை.. கொரோனா நோயாளி திடீர் மரணம்!

 

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை.. கொரோனா நோயாளி திடீர் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற தட்டுப்பாடு ஏற்பட்டதைப் போல இந்த ஆண்டு நிகழா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளை ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் பாதிப்பு குறைவாக இருக்கும் நோயாளிகளை பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை.. கொரோனா நோயாளி திடீர் மரணம்!

இந்த நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி எஸ்தர் ராணி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்தருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக செவிலியர்களை அழைத்துள்ளனர். செவிலியர்கள் வந்து பரிசோதிப்பதற்குள் ராணி உயிர் பிரிந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் எஸ்தர் ராணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எஸ்தர் ராணி மட்டுமல்லாது அருகில் மற்ற படுக்கையிலிருந்த நோயாளிகளும் அவதி அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.