அதிகரிக்கும் கொரோனா: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

 

அதிகரிக்கும் கொரோனா: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.கேரளாவில் ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் 13 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டகொரோனா இல்லை என்று சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதிகரிக்கும் கொரோனா: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

அப்படி இல்லை என்றால் கொரோனா தடுப்பு ஊசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி ,போடிமெட்டு சோதனை சாவடி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பலரும் வந்து செல்லும் நிலையில் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.