மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ்!

 

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ்!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ்!

கூட்டத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக பேரவை தொடர்களில் கலந்துகொள்ளவுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ்!

இந்நிலையில் நேற்று எடுக்கப்பட்ட பிசிஆர் சோதனை முடிவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. முன்னதாக முதல்வர், சபாநாயகர், துணை முதல்வருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியது கவனிக்கத்தக்கது.