சபரிமலையில் நாளை நடை திறப்பு: கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்!

சபரிமலையில் நாளை நடை திறப்பு: கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்!

துலாம் மாத பூஜையை ஒட்டி நாளை நடை திறக்கவிருப்பதால், பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வர வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த முறை கொரோனா பாதிப்பின் காரணமாக, மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதைக்கு பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை.

சபரிமலையில் நாளை நடை திறப்பு: கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்!

இந்த நிலையில், சபரிமலையில் மலையாள மாதமான துலாம் மாத பூஜையை நாளை நடைபெற உள்ளது. இதற்காக நாளை கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், நாளொன்றுக்கு 250 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் நாளை நடை திறப்பு: கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்!

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என்றும் ஆன்லைன் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் யாரும் பம்பையில் குளிக்கவும் தங்கிச் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.