“கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்”- ஆட்சியர் அறிவிப்பு!

 

“கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்”- ஆட்சியர் அறிவிப்பு!

தேனி

கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரானா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டு உள்ளார்.

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வரும் நிலையில், பல்வேறு கட்ட ஊரடங்கை அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, கேரளாவின் அருகே அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருந்து, கேரளாவிற்கு செல்வதற்கும் தடுப்பூசி 2 தவணை போட்டிருக்கவும், கொரானா தொற்று இல்லை என சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

“கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்”- ஆட்சியர் அறிவிப்பு!

எனினும், கேரளாவில் இருந்து கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி வழியாக தேனி மாவட்டத்திற்குள் வர எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி இருந்தது. இதனால் அம்மாநிலத்தில் இருந்து வருபவர்கள் மூலம் தேனி மாவட்டத்தில் தொற்று பரவும் அபாயம் இருந்து வந்தது.

இந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் விதமாக இனிமேல் கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்டயம் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அறிவித்து உள்ளார். இதன் படி, கேரள எல்லையில் அமைந்துள்ள கம்மெட்டு உள்ளிட்ட 3 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.