பயணிகளின் கவனத்திற்கு… சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு!

 

பயணிகளின் கவனத்திற்கு… சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மக்கள் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உள்நாட்டிற்குள் பயணம் செய்யும் பயணிகளுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

பயணிகளின் கவனத்திற்கு… சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு!

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் உட்பட 6 வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தில் சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும். அதை சமர்ப்பித்தால் மட்டுமே பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய முடியுமாம்.

பயணிகளின் கவனத்திற்கு… சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு!

சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தமான், புவனேஸ்வா் (ஒடிசா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்குவங்கம்), ராஜ்கோட் (குஜராஜ்) ஆகிய 6 நகரங்களுக்குச் செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.