கொரோனா எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா? உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?  உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா நோய் பரவல் முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?  உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவை கடந்த 2020 மார்ச் மாதம் வந்தடைந்தது.அன்றிலிருந்து பல மாதங்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிலமாதங்கள் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?  உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் பேசும்போது, “மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களுக்கு கொரோனா வராது என உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டும்தான் கொரோனா கட்டுக்குள் வரும் சாத்தியம் உள்ளது. இதில் நமக்குத் தெரிந்த உண்மை. அதனால் அதை மக்கள் அதிக அளவில் நடைமுறைபடுத்த வேண்டும். கடந்த ஏழு வாரங்களாக கொரோனா உலக அளவில் அதிகரித்து வருகிறது. உலகில் ஒரேவாரத்தில் 9% கொரோனா அதிகரித்துள்ளது . அதேபோல் ஒரே வாரத்தில் 5% இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா குறித்த பல்வேறு குழப்பங்கள் ,சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்” என்று தெரிவித்துள்ளார்.