கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

 

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

கொரோனா தொற்று உலகம் முழுவதும் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டு நலம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு விகிதங்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. முக்கியமாக முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

இந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாவதும், மீள்வதும், சில உயிரிழப்புகளும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி , நினைவிழந்த நிலைக்குச் சென்று மீண்டு வந்தார். பல நாடுகளின் பிரதமர்களும் அரசியல்வாதிகளும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். சிலர் மீளவில்லை.

இந்தியாவில் அதி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொற்றுக்கு ஆளாகி , சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி பலியாகியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பமே தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் , கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபலங்களில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறார் பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் தேறி வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

தமிழக அரசியல்வாதிகளில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

இந்த நிலையில், கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருந்த விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது நலமுடன் உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஏற்கெனவே ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம், திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆர்.எஸ்.பாரதிக்கு தொற்று பாதிப்பு அந்த கட்சியினரை கலக்கமடைய வைத்துள்ளது.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என பொதுப்பணியில் உள்ள பலரும் கொரோனா தொற்றில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மூத்த அரசியல்வாதிகள், வயதான பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதை கவனிக்க முடிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளநிலையில், அரசியல் கட்சியை தொடங்குவதும் தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்துவதும் அவரது உடல் நிலைக்கு பொருத்தமல்ல என்று பலரும் கூறுகின்றனர்.

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

உடல் நலனைத் தாண்டி, கொரோனா ஏற்படுத்தும் உயிரச்சம் எவரையும் கொஞ்சம் அசைத்துதான் பார்க்கிறது. பிரபலங்களே பத்திரம்!