கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது மெக்சிகோவில்!

 

கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது மெக்சிகோவில்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 47 லட்சத்து   74 ஆயிரத்து 763 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 598 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 49 ஆயிரத்து 225 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 10,86,940 பேர்.

கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது மெக்சிகோவில்!

மெக்சிகோவில் ஏப்ரல் மாதம் முதலே புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் உச்சபட்ச எண்ணிக்கையாக ஆகஸ்ட் 02-ம் தேதி 9866 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த மாதங்களில் மெல்ல குறைந்தது. இப்போது சில வாரங்களாக மீண்டும் அதிகளவில் அதிகரித்து வருகிறது.

மெக்சிகோவில் இப்போதைய நிலவரப்படி  கொரோனாவின் மொத்த பாதிப்பு 9,06,863 பேர். இவர்களில் குணமடைந்தவர்கள் 6,63,639 பேர்.

கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது மெக்சிகோவில்!

கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 90,309 பேர். ஒரே நாளில் அதிகம் பேர் இறந்தது ஜூன் 04. எண்ணிக்கை 1,128 பேர். இறப்புவிகிதம் 14 சதவிகிதத்திலிருந்து தற்போது 12 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆயினும் உலகளவில் பார்க்கையில் இறப்பு விகிதம் ரொம்பவே அதிகம்.

தற்போது இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது மெக்சிகோவில். நேற்று மட்டுமே 643 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அதிகரித்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 5942 பேர். நோய் குணம் அடைபவர்களில் உச்சமாய் அக்டோபர் 9-ம் தேதி 22,708 பேர் நலம் அடைந்தார்கள்.