Home தமிழகம் சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலி!

சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலி!

சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

covid 19

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் 14  பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி -5, ஓமந்தூரார் -3, ஸ்டான்லி – 1, கே. எம். சி -3, தனியார் மருத்துவமனை 2 என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கூட்டமாக வந்து கெடுத்தார்கள் -குடும்பத்தோடு வந்து சமாதானம் பேசினார்கள் -இறுதியில் நடந்த சோகம் .

தன்னை பலாத்காரம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு வந்த மிரட்டலால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் .

வைகை ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி!

மதுரை மதுரையில் வைகை ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மகபூப்பாளையம் பகுதியை...

நிர்மலா சீதாராமனை போட்டு தாக்கிய டாப்ஸி… 3 நாள் ரெய்டில் நடந்த 3 விஷயங்கள் குறித்து ஓபன் டாக்!

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் மது மான்டேனா, விகாஸ் பால் ஆகியோர் வீடுகளில் மார்ச் 3ஆம் தேதியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவந்தனர். இவர்களின் வீடுகள், பாண்டம்...

முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் என்பதால் ஐந்து மாநிலங்களும் கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பரபரப்பாக இருக்கிறது....
TopTamilNews