கொரோனா விவகாரம்: தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு முட்டுசந்தில் நிற்கிறது… திருமுருகன் காந்தி விமர்சனம்

 

கொரோனா விவகாரம்: தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு முட்டுசந்தில் நிற்கிறது… திருமுருகன் காந்தி விமர்சனம்

இந்துத்துவ கும்பலால் தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு தற்போது முட்டுசந்தில் நிற்கிறது என்று திருமுருகன் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தமிழக அரசு தொடக்கத்திலிருந்து அலட்சியமாக கையாண்டு வந்தது. யாருடைய ஆலோசனையையும் ஏற்காமல் தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற வகையில் நடந்து வந்தது என்று அனைத்து தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா விவகாரம்: தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு முட்டுசந்தில் நிற்கிறது… திருமுருகன் காந்தி விமர்சனம்தமிழக அரசின் அலட்சியம் காரணமாகத்தான் தற்போது கொரோனா மாநிலங்கள் பட்டியலில் தமிழக அரசு இரண்டாவது இடத்தில் உள்ளது. இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

http://


மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி இன்று வெளியிட்டுள்ள பதிவில், “ஏப்ரல் 1ல் தமிழகத்தில் 234, கேரளாவில் 261 இருந்த கொரொனா தொற்று 75 நாளுக்குப் பின் தமிழகம் 46,500 ஆகவும், கேரளம் பட்டியலில் இல்லாமலும் ஆனது. இது தமிழகத்தின் அப்பட்டமான தோல்வி. ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்பதை இது காட்டுகிறது.
ஊரடங்கு மட்டும் தீர்வல்ல மாறாக பரிசோதனைகளை அதிகரித்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என மார்ச் மாதத்திலேயே மே17 கோரிக்கை வைத்தது. எவரது ஆலோசனையையும் ஏற்கவில்லை. மாறாக இந்துத்துவ அமைப்புகளை மட்டுமே ஊக்குவித்தது. மக்கள் நேயத்துடன் ஆலோசனை சொல்பவர்கள், கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்கை ஏவியது. இணைந்து பணிசெய்ய எவரையும் அனுமதிக்கவில்லை

http://


இசுலாமியரைக் குறிவைத்து பிரச்னையை திசைதிருப்பியது. இந்துத்துவ கும்பலால் தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு தற்போது முட்டுசந்தில் நிற்கிறது. வழக்கம் போல டில்லிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு தமிழகத்தை பாஜக கைகழுவிவிட்டது. இப்போது சங்கிகள் சீனாவைப் பற்றிப் பேசக் கிளம்பிவிடுவார்கள்.
டெல்லியில் பரிசோதனையை அதிகரிக்கப் போவதாக அமித்ஷா சொல்லியிருக்கிறார். சோதனையை அதிகரிக்க மார்ச் மாதத்திலேயே மே17 இயக்கம் கோரியது. டெல்லியைவிட அதிக தொற்றுகொண்ட தமிழகம். இப்பொழுதாவது அதிமுக அரசு கண்விழிக்குமா? பரிசோதனையை தீவிரப்படுத்தவில்லையெனில் சென்னையை மட்டுமல்ல தமிழகத்தையும் காக்க இயலாது” என்று கூறியுள்ளார்.