கொரோனா எதிரொலி- அருங்காட்சியகங்களை மூட உத்தரவு

 

கொரோனா எதிரொலி- அருங்காட்சியகங்களை மூட உத்தரவு

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று மட்டும் 93,669 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 370க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவியிருப்பதால், அதன் வீரியமும் வேகமும் அதிவேகமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.

கொரோனா எதிரொலி- அருங்காட்சியகங்களை மூட உத்தரவு

இந்நிலையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தொல்லியல் துறையின் கீழ் உள்ள புராதன சின்னங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 15 ஆம் தேதி மாமல்லபுரம், தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய வரலாற்று சின்னங்களை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.