`2995 தெருக்களில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை; இறப்பு குறைந்திருக்கு!’- சென்னை மாநகராட்சி ஆணையர்

 

`2995 தெருக்களில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை; இறப்பு குறைந்திருக்கு!’- சென்னை மாநகராட்சி ஆணையர்

தண்டையார்பேட்டை பகுதியில் 2995 தெருக்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 14 நாட்களில் ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
`2995 தெருக்களில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை; இறப்பு குறைந்திருக்கு!’- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கொரோனா காரணமாக வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் முறை தீவிரப்படுத்தப்பட்டது. ஒருவருக்கு நோய் அறிகுறி கண்டறியப்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 500கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் காய்ச்சல், சளி ஆகியவை கண்டறியப்படுகிறது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

ஜூன் 30ம் தேதி வரை 3,65,113 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தனிமைப்படுத்துதல் மூலமாக நோய் தொற்று பரவுதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 1,000 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பரிசோதனை செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம்தான் இந்திய அளவில் அதிகளவு பரிசோதனைகளைச் செய்கிறது. பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கும் பணி 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன.

`2995 தெருக்களில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை; இறப்பு குறைந்திருக்கு!’- சென்னை மாநகராட்சி ஆணையர்

மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது சிரமமாக உள்ளது. தண்டையார்பேட்டை பகுதியில் 2995 தெருக்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 14 நாட்களில் ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. அதேபோல் 120க்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் தொற்று முழுவதுமாக ஒழிக்க முடியும்.

தொற்று பாதித்த முதியவர்களின் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு, அந்த மண்டலத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் போதும். கடந்த 3 ஆண்டுகளில் இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்துள்ளது. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்தோர் எண்ணிக்கை 4859, மே மாதம் 5149; 2019ம் ஆண்டு ஏப்ரலில் 4888 மரணங்கள், மே மாதம் 5738. இந்த எண்ணிக்கை இவ்வாண்டு (2020) ஏப்ரல் மாதம் 3754ஆகவும் மே மாதம் 4532 என்ற அளவிலும் உள்ளது” என்று கூறினார்.