கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!

 

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 59 வயதான அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடந்த 21 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் கொரோனாவில் இருந்து ஓரளவு மீண்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் கடந்த 28 ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.