“பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது”- அமைச்சர் பென்ஜமின்

 

“பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது”- அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, திட்டதை தொடங்கிவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே இரு முறை ஒத்திகை நிகழ்ச்சி முடிந்ததும், 20 ஆயிரத்து 430 நபர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு, அதில் 19 ஆயிரத்து 600 நபர்களுக்கு முதற்கட்டமாக ஊசி போடுவது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

“பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது”- அமைச்சர் பென்ஜமின்

முதல்நாளான இன்று 9 ஆயிரத்து 600 நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக போடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது வரை 43 ஆயிரத்து 164 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும், இதில் 42 ஆயிரத்து 210 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தற்போது 272 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதகாவும் தெரிவித்தார். தமிழக முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார்.