பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதியானது!

 

பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதியானது!

உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. வல்லரசு நாடுகளும் கொரோனாவை எதிர்கொள்ள திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 888 பேர். ரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 59 ஆயிரத்து 093 பேர்.

பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதியானது!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 19 லட்சத்து 05 ஆயிரத்து 975 நபர்கள். சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது என்றாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. அதனால், அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதியானது!

40 வயதான ரொனால்டினோ, 1998 முதலே கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்று வருபவர். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருப்பவர். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் கவல்லையோடு இருக்கிறார்கள்.