“கொரோனா வேகமாக பரவுகிறது; ஒத்துழைப்பு தாருங்கள்”

 

“கொரோனா வேகமாக பரவுகிறது; ஒத்துழைப்பு தாருங்கள்”

ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் அவருடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பை விட தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா இரண்டாம் அலை பரவியுள்ளதாக அறிவிக்க பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த சூழலில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் 40 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“கொரோனா வேகமாக பரவுகிறது; ஒத்துழைப்பு தாருங்கள்”

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தரவேண்டும். 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரம் தெருக்களில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்று நகரப்பகுதிகளில் பள்ளிகளை மூடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது அரசியல் பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடைபெறுவதால் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார்.

“கொரோனா வேகமாக பரவுகிறது; ஒத்துழைப்பு தாருங்கள்”

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.