கொசுவால் பரவாது கொரோனா… உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்!

 

கொசுவால் பரவாது கொரோனா… உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்!

கொசுவால் கொரோனா பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி மாதம்தான் வெளிப்படத் தொடங்கியது. அது தொடர்பாக தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று கூறப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று உறுதி செய்ததைத் தொடர்ந்து, அது பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை உலக சுகாதார நிறுவனம் மாற்றியது.

கொசுவால் பரவாது கொரோனா… உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்!இந்தநிலையில் கொரோனா கொசுக்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. கொரோனா நோயாளியை கடிக்கும் கொசு மூலமா கொரோனா வைரஸ் கொரோனா பாதிப்பு இல்லாத நபரை கடிக்கும்போது பரவும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என்பது உறுதியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம்

கொசுவால் பரவாது கொரோனா… உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்!

தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்பதற்கு உறுதியான தரவுகள் எங்கள் ஆய்வில் கிடைத்துள்ளது. இந்த ஆய்வுக்காக டெங்கு வைரஸ் கிருமியை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி உள்ளிட்ட அனைத்து வகை கொசுக்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கொசுக்கள் வைரஸ் கிருமியை சுமந்து செல்வது இல்லை என்பது உறுதியாகி உள்ளது” என்றார்.

கொசுவால் பரவாது கொரோனா… உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்!
இதற்கிடையே மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா என்ற ஆய்வு தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா கொசுக்கள் மூலம் பரவாது என்ற செய்தி மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. அதே நேரத்தில் கொசுக்கள் மூலம் டெங்கு உள்ளிட்டவை பரவும் என்பதால் அதைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.