மேற்கு வங்கத்தில் கொரோனா ஒழிந்துவிட்டது! – பா.ஜ.க தலைவரின் புத்திசாலித்தனமான பேச்சு

மேற்கு வங்கத்தில் கொரோனா ஒழிந்துவிட்டது! – பா.ஜ.க தலைவரின் புத்திசாலித்தனமான பேச்சு

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று ஒழிந்துவிட்டது, பா.ஜ.க வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே மம்தா பானர்ஜி கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக அம்மாநில பா.ஜ.க தலைவர் அறிவுப்பூர்வமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கொரோனா ஒழிந்துவிட்டது! – பா.ஜ.க தலைவரின் புத்திசாலித்தனமான பேச்சு

மேற்கு வங்கி மாநில பா.ஜ.க தலைவராக உள்ளவர் திலிப் கோஷ். இவர் ஹூக்ளி நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது “மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது. அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே மம்தா பானர்ஜி ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். ஆனால், எங்களை யாராலும் தடுக்க முடியாது.

மேற்கு வங்கத்தில் கொரோனா ஒழிந்துவிட்டது! – பா.ஜ.க தலைவரின் புத்திசாலித்தனமான பேச்சு

மேற்கு வங்க மக்கள் பா.ஜ.க-வை நம்புகிறார்கள். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதே பா.ஜ.க-வை வீழ்த்திவிடலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் நினைத்தது. பா.ஜ.க என்ன செய்யப் போகிறது பாருங்கள் என்று அப்போதே கூறியிருந்தேன். மக்கள் மகத்தான வெற்றியைத் தந்தார்கள். சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறும். அதன் பிறகு மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம்” என்றார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா ஒழிந்துவிட்டது! – பா.ஜ.க தலைவரின் புத்திசாலித்தனமான பேச்சு

மேற்கு வங்கத்தில் தினமும் 3000-க்கு மேல் என்ற அளவில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மொத்த பாதிப்பு 1.93 லட்சத்தை எட்டியுள்ளது. 3711 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனாத் தொற்று அழிந்துவிட்டது என்று பா.ஜ.க மாநில தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.