புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக உயர்வு!

புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11.45 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 54,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 764 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,445 பேர் குணமடைந்த நிலையில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

Most Popular

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு...

96 மணி நேர கண்காணிப்பு காலம் முடிந்தது… பிரணாப் உடல் நிலை பற்றி அவர் மகன் பேட்டி

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்திருந்த 96 மணி நேர அபாய காலகட்டத்தை அவர் கடந்துவிட்டார் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 10ம் தேதி டெல்லி ஆர்மி...

“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின்...

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கேரள நீதிமன்றம் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவர்...
Do NOT follow this link or you will be banned from the site!