இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று!

 

இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34,63,972 லிருந்து 35,42,733 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 26.48 லட்சத்திலிருந்து 27.13 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62,650 லிருந்து 63,498 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . ஒரே நாளில் 64,935 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 948 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7.65 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.