கொரோனா பாதிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்தைக் கடந்தது

 

கொரோனா பாதிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்தைக்  கடந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று இந்தியாவையே ஆட்டிப் படைத்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் லாக்டெளன் அறிவித்தும் கொரோனா நோய்த் தொற்றும் வேகம் குறையவில்லை. மாறாக அதிவேகத்தில் பரவியது. தொடக்கத்தில் மாநகரங்களில் மட்டுமே பரவி வந்த நிலையில் தற்போது சின்னச் சின்னக் கிராமங்களில்கூட நோய்த் தொற்று அதிகமாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்தைக்  கடந்தது

முழுக்கவே கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம் திருவாரூர். ஏப்ரல், மே மாதங்களில் இங்கு நோய்த் தொற்று சற்று அதிகம் எனும் அளவில் இருந்தாலும் நாளடைவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இல்லை என்ற நிலை பல நாள்கள் இருந்திருக்கிறது. ஆனால், சமீபமாக திருவாரூர் மாவட்டத்தில் நோய்த் தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது.

இன்று (ஜூலை 21) மட்டும் புதிதாக நோய்த் தொற்றுள்ளவர் 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த மாவட்டத்தின் கொரோனா பாதிப்புள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்தைக்  கடந்தது

நேற்றைய நிலவரப்படி (ஜூலை 20) திருவாரூர் மாவட்டத்தில் 293 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரிலும் கொரோனா நோய்த் தொற்று முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.