ஒத்துழைப்பு கொடுக்காத எல்.கே. சுதீஷ் உடல்நிலை!! கலக்கத்தில் தினகரன்

 

ஒத்துழைப்பு கொடுக்காத எல்.கே. சுதீஷ் உடல்நிலை!! கலக்கத்தில் தினகரன்

கொரோனா காரணமாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கிங் இன்ஸ்ட்டிடியூட்க்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளது. இந்த சூழலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த முறை தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது தேமுதிக.இந்த சூழலில் பிரேமலதா தம்பி எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தது.

ஒத்துழைப்பு கொடுக்காத எல்.கே. சுதீஷ் உடல்நிலை!! கலக்கத்தில் தினகரன்

இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எல்.கே. சுதீஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் நாளை முதல் பரப்புரை மேற்கொள்ள அட்டவணையும் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த சூழலில் எல்.கே.சுதீஷ் தனியார் மருத்துவமனையிலிருந்து மாற்றி சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் சுதீஷுக்கு கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது