அமெரிக்க அதிபரின் மகனுக்கு கொரோனா தொற்று

 

அமெரிக்க அதிபரின் மகனுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க அதிபர் மகனுக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர்.

அமெரிக்க அதிபரின் மகனுக்கு கொரோனா தொற்று

அதனால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குப்பட்டு, வெள்ளை மாளிகை திரும்பினார்.

அமெரிக்க அதிபரின் மகனுக்கு கொரோனா தொற்று

இந்நிலையில் ட்ரம்பின் மகன் பாரனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக அவரின் தாய் மெலானியா செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார். 14 வயதான பாரனுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பதால் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வில்லை எனும் குற்றச்சாட்டு ட்ரம்ப் மீது வைக்கப்படும் நிலையில் அவருக்கு, மனைவிக்கு, மகன் என வரிசையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.