நகைக்கடை ஊழியர்கள் 51 பேருக்கு கொரோனா : கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது வழக்குப்பதிவு!

நகைக்கடை ஊழியர்கள் 51 பேருக்கு கொரோனா : கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது வழக்குப்பதிவு!

கோவை 100 அடி சாலையில் பிரபல நகைக்கடையான கல்யாண் ஜுவல்லர்ஸ் இயங்கி வருகிறது . இங்கு கடந்த 15ஆம் தேதி ஊழியர் ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடை மூடப்பட்டது.

நகைக்கடை ஊழியர்கள் 51 பேருக்கு கொரோனா : கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது வழக்குப்பதிவு!

இதைத்தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த 90 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை போன்ற இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரே கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த ஜுவல்லரி நிர்வாகம் மீது சுகாதாரத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஜுவல்லரியின் மேலாளர்கள் விஜயகுமார், விபின் ஆகியோர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நகைக்கடை ஊழியர்கள் 51 பேருக்கு கொரோனா : கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது வழக்குப்பதிவு!

அஜாக்கிரதையாக செயல்பட்டு நோய் தொற்றை தோற்றுவித்ததாக சுகாதாரத்துறையினர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக கடைக்கு வந்து சென்ற பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.