மேட்டுப்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

மேட்டுப்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த, ஆசிரியர்கள் அந்த 2 மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

அதில், இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அந்த 2 மாணவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறை உத்தரவுப்படி பள்ளி வளாகத்தை சுற்றியும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தொற்று அறிகுறி இருந்தால் தெரிவிக்கும்படி பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த பள்ளியில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.