கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி

 

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி

அதிமுக எம்எல்ஏ கே. எஸ். விஜயகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 5,325 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999 ஆக அதிகரித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான கே.எஸ்.விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.