அமமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

அமமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என்றால் லாக்டவுன் போடவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இதனிடையே, சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதால், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததுடன், வேட்பாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அமமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் குருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பரப்புரையில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர், மோகன்ராஜ், எல்.கே சுதீஷ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை விருகம்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.