ராமேஸ்வரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

ராமேஸ்வரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், போலி முகவரியை கொடுத்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஊரடங்கின்போது அவசியமின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது, பிடிபட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதாகவும், மருந்து வாங்க செல்வதாகவும் கூறி தப்பிச்செல்ல முயன்றனர்.

ராமேஸ்வரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆனால் அவர்களை விட மறுத்த போலீசார், அவர்களுக்கு சுதாரத்துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முகவரிகளை பெற்று அனுப்பி வைத்தனர். இதன்படி, 89 பேரை பிடித்து சோதனையிட்டதில், 9 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, தொற்று உறுதியானவர்களிடம் தகவல் தெரிவிப்பதற்காக போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண்கள் தவறானவை என தெரியவந்தது.

இதனால், அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் தகவலை தெரிவிக்க முயன்றபேது, அவர்கள் அளித்த முகவரியும் போலி என்பது தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும, அந்த நபர்களின் மூலம் மற்றவர்களுக்கும் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதால், 9 நபர்களையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.