மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

 

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கான கருத்துகேட்பு கூட்டத்தில் அவர் பங்கேற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

இதேபோல ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.