4 கோடியை நெருங்குகிறது – உலகளவில் கொரோனா நிலவரம்

 

4 கோடியை நெருங்குகிறது – உலகளவில் கொரோனா நிலவரம்

அக்டோபர் 16-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 91 லட்சத்து  76 ஆயிரத்து 103 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 93 லட்சத்து 79 ஆயிரத்து 089 நபர்கள்.

4 கோடியை நெருங்குகிறது – உலகளவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 02 ஆயிரத்து 946 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 86,94,068 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 82,19,315 பேரும், இந்தியாவில் 73,70,468 பேரும், பிரேசில் நாட்டில்  51,70,966 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

4 கோடியை நெருங்குகிறது – உலகளவில் கொரோனா நிலவரம்

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில்,  அமெரிக்காவில் 66,129 பேரும், பிரேசிலில் 29,498 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 60,439  பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, இந்தியா நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம்.