லட்சக்கணக்கில் அதிகரிக்கும் கொரோனா! அஞ்சும் அமெரிக்கா

 

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் கொரோனா! அஞ்சும் அமெரிக்கா

கொரோனாவின் கோர கைகள் நாள்தோறும் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. பல நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புத் தொடங்கி விட்டன. ஆஸ்திரேலியாவில் ஆறு நாட்கள் லாக்டெளன் அறிவித்து விட்டார்கள். பல நாடுகளில் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூடியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 339 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 54 ஆயிரத்து 813 பேர். குணம் அடைந்தோர் 3 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 858 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,58,56,668 பேர்.

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் கொரோனா! அஞ்சும் அமெரிக்கா

கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்தே அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகம். இப்போது இன்னும் அதிகமாகி விட்டது. அமெரிக்காவில் 1,18,73,727 பேரும், இந்தியாவில் 89,58,483 பேரும், பிரேசில் நாட்டில் 59,47,403 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று மட்டுமே அமெரிக்காவில் 1,73,632 பேர் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று மட்டுமல்ல இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே தினசரி லட்சக்கணக்கில்தான் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். உட்சபட்சமாக நவம்பர் 13-ம் தேதொ 1,87,956 பேர் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இது மிக அதிகமாகிக்கொண்டே இருப்பது ஆபத்தானது.

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் கொரோனா! அஞ்சும் அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது சிகிச்சையிலிருப்போ 44,51,447 பேர். அரை கோடியை நெருங்கி வருகிறது இந்த எண்ணிக்கை. இவர்களி சீரியஸ் நிலையில் இருப்போ 22,195 பேர். 44 லட்சம் பேருக்குச் சிகிச்சை அளிப்பது என்பது பெரும் சவால்.

டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே அதிக கொரோனா நோயாளிகள் உள்ளவை ஆகும். ஆனால், நியூ யார்க்கில்தான் அதிக மரணம் நடந்துள்ளது. 6,11,988 பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் 34,105 பேர் மரணம் அடைந்திருகிறார்கள். தற்போது அங்கு ஆக்டிவ் கேஸ் 1,45,462 பேர்.

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். அமெரிக்காவில் 1,956, பிரேசிலில் 754, இந்தியாவில் 587 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,31,618 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்