சென்னையில் குறையும் கொரோனா ; காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

சென்னையில் குறையும் கொரோனா ; காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மதுரை, தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

சென்னையில் குறையும் கொரோனா ; காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 440 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 11,328 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 345 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 6,355 ஆக உயர்ந்துள்ளது. அதே போல திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு உறுதியானதால் பாதிப்பு 4,787 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 654 ஆக அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.