தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 1,57,051 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. நாளொன்றுக்கு பாதிப்புகள் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

இந்த நிலையில், தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், புதிதாக உருவான மொத்த பாதிப்பில் இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.