இலங்கை சிறையில் கொரோனா – துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு 11 பேர் மரணம்

 

இலங்கை சிறையில் கொரோனா – துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு 11 பேர் மரணம்

கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கொரோனாவின் தொடக்கம் தென்பட்ட உடனே, லாக்டெளன், தனிமைப்படுத்தல், விமான நிலையம் மூடல் என பரபரப்பாக இருந்து கொரோனாவைக் கட்டுப்படுத்தியது. ஆனால், சமீப சில வாரங்களாக இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனா பாதிப்பு 23,987 பேர். இவர்களில் 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். 17500 பேர் சிகிச்சையில் நலம் மீண்டு பெற்றுவிட்டனர்.

இலங்கை சிறையில் கொரோனா – துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு 11 பேர் மரணம்

இலங்கையில் உள்ள மஹர சிறையில் 183 சிறைவாசிகளுக்குக் கொரோனா தொற்று உள்ளதாம். அதனால், மற்ற கைதிகளுக்கு அச்சம், பதட்டமும் சூழ்ந்துவிட்டது. கைதிகள் சரியான மருத்துவமும், தனி மனித இடைவெளியோடு இருக்கவும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவை முறையாக ஏற்கப்பட வில்லை. எனவே, அங்கு ஏற்பட்ட மோதல், கலவரத்த்தால் சிறையே போர்களமாகி விட்டது.

அதைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து சிறைக்குள் மோதல் அதிகரித்து தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதனால், பல சிறைக் கைதிகள் காயப்பட்டனர். இப்போது நிலவரப்படி 11 பேர் இறந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

இலங்கை சிறையில் கொரோனா – துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு 11 பேர் மரணம்

இந்தப் பிரச்சனை இலங்கையில் பெரிய விவகாரமாகப் பேசப்படுகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஐ.நா சபையின் இலங்கை பிரதிநியும் இந்த விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.