10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் இயக்குநர் அலுவலகத்தில் கைவரிசை காட்டிய கொரோனா!

 

10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் இயக்குநர் அலுவலகத்தில் கைவரிசை காட்டிய கொரோனா!

10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்வுத் துறையினர் பீதியடைந்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் உள்ளது. அரசு பொதுத் தேர்வுகளை நடத்தும் அமைப்பு இதுதான். தேர்வுத் துறை உதவி இயக்குநர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் அங்கு இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்று தெரியவில்லை. தேர்வுத் துறை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுத் தேர்வுத் துறையில் கொரோனா பரவியதையே தடுக்க முடியாத அரசு, 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவுவதை எப்படித் தடுக்கப்போகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்