விழுப்புரத்தில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா..மதுரை, நெல்லை மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்!

 

விழுப்புரத்தில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா..மதுரை, நெல்லை மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும், தமிழகம் முழுவதிலும் 80 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ஆனால், தமிழகத்தில் உயிரிழப்பு குறைவாகவே இருப்பது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விழுப்புரத்தில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா..மதுரை, நெல்லை மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்!

இந்த நிலையில் நெல்லை, விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. நெல்லையில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,455 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மதுரையில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,418 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விழுப்புரத்தில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,000 ஆக அதிகரித்துள்ளது.