சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துகொண்டு வருகிறது. ஆயினும் உலகளவில் புதிய நோயாளிகள் அதிகரிக்கும் பட்டியலில் இரண்டாம் இடத்தில்தான் இந்தியா உள்ளது.

இந்தியாவில் 2 மாதங்களுக்குப் பிறகு (63 நாட்கள்), நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணக்கை, 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நாட்டில் இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,95,509 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 8.96%.

சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தை (69,48,497) நெருங்குகிறது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்கும் உள்ள வித்தியாசம் 62,52,988 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 73,979 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 54,366 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 89.53% ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும், மத்திய அரசின் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதாலும், இறப்பு வீதம் 1.51% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

கொரோனா நோயாளிகள் குணமடையும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் கர்நாடாகவும் உள்ளன. மூன்றாம் இடத்தில் கேரளா உள்ளது.

சிகிச்சை பெறுவோர் 7 லட்சத்துக்கும் குறைவு – இந்தியாவில் கொரோனா

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிநாடு ஏழாம் இடத்தில் உள்ளது. . முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் கேரளாவும் உள்ளன. இறப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. . முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் கர்நாடாகவும் உள்ளன.