டெல்லியில் கொரோனா: மொத்த எண்ணிக்கையை 1,30,000 யைக் கடந்தது

 

டெல்லியில் கொரோனா: மொத்த எண்ணிக்கையை 1,30,000 யைக் கடந்தது

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்திய அளவில் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. எனவே, நோய்த் தொற்று வேகம் குறையும் என கருதப்பட்டது. மாறாக, நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்தது.

டெல்லியில் கொரோனா: மொத்த எண்ணிக்கையை 1,30,000 யைக் கடந்தது

இன்றைய தேதி வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகின் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் கடும் தீவிரத்துடன் தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வுகளில் மூழ்கியுள்ளனர். டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் 30 வயது இளைஞரின் உடலில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆரம்பம் முதலே நோய்த் தொற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அம்மாநில முதவர் அரவிந்த் கெஜ்ரிவால்க்கே கொரோனா நோய் தொற்று இருப்பதாகப் பேசப்பட்டது. பின், பரிசோதனைகள் செய்து தனக்கு நோய் தொற்று இல்லை என முடிவுகளைத் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா: மொத்த எண்ணிக்கையை 1,30,000 யைக் கடந்தது

இன்றைய நிலையில் (ஜூலை 26) அன்று மட்டும் டெல்லியில் மேலும் 1,075 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், டெல்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,,606 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று இறந்த 21 பேருடன் மொத்தம் 3,827 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

நோய்த் தோற்று அதிகமாக இருந்தாலும் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் சதவிகிதமும் அதிகம் இருப்பது இபோதைக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.