#BREAKING: தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா!

 

#BREAKING: தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா!

தஞ்சை மாவட்டத்தின் 5 பள்ளிகளில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறையும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பொது இடங்களுக்கு பொதுமக்கள் மாஸ்க் அறிந்து செல்லாவிடில் சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

#BREAKING: தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா!

அதுமட்டுமில்லாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்தியிருந்தாலும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, பள்ளிகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது.

#BREAKING: தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா!

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தஞ்சை, அம்மாபேட்டை, பட்டுக்கோட்டை, ஆலத்தூர் ஆகிய பள்ளிகளில் பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.