கொரோனா எதிரொலி: கேரளாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும்!

 

கொரோனா எதிரொலி: கேரளாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 6லட்சத்து 75ஆயிரத்து 453ஆக அதிகரித்துள்ளது. 19 ஆயிரத்து 303 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள் உட்பட புதிதாக 225 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,204 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா சமூக பரவல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக இந்திய மருத்துவ சங்க கேரள மாநில தலைவர் ஆபிரகாம் வர்கீஸ் தெரிவித்துளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் நோய் பரவியுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து நோய் அறிகுறி இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு செல்வோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா எதிரொலி: கேரளாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும்!

இதையடுத்து கேரளாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல பொது இடங்கள், அலுவலகங்களில் 6 அடி தூரம் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. போராட்டங்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டுமென கூறியுள்ள கேரள அரசு, அதிலும் 10 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது. தற்போது கேரளாவில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் ”யானை சவாரி” தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.