இலங்கையில் கொரோனா பாதிப்பு 6,000 -யைத் தொட்டது!

 

இலங்கையில் கொரோனா பாதிப்பு 6,000 -யைத் தொட்டது!

கொரோனா தொற்று நாட்டுக்குள் தெரிய வந்ததும் உஷாராகி, பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடு இலங்கை. அதனால்தான் அங்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று தென்பட்டாலும் இன்று வரை கட்டுக்குள் இருந்து வருகிறது.

ஆனால், இலங்கையில் தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 6,000 -யைத் தொட்டது!

அக்டோபர் 19 அன்று மட்டும் 87 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று அக்டோபர் 21 அன்று 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மதிய நிலவரப் படி, இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 6,028 பேர். இவர்களில் குணம் பெற்று வீடு திரும்பியோர் 3,561 பேர். சிகிச்சையில் இருப்போர் 2454 பேர். சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 பேர்.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 6,000 -யைத் தொட்டது!

இலங்கையில் 23 இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மீன் சந்தை, தொழில்சாலை ஊழியர்கள் எனப் பல்வேறு இடங்களில் கொரோனா நோய்த் தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.