ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 5, 427 ஆக உயர்வு

 

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 5, 427 ஆக உயர்வு

சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 5427 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நேற்று ஒரே நாளில் 122 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 4281 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 1076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 5, 427 ஆக உயர்வு

கொரோனாவால் ஏற்கனவே மாவட்டத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று பவானியை சேர்ந்த 59 வயது பெண், ஈரோடு ஆர்.என். புதூரை சேர்ந்த 68 வயது முதியவர் ,கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் என மூன்று பேர் உயிரிழந்தனர் . இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 5, 427 ஆக உயர்வு

இதுகுறித்து சுகாதார துறைஅதிகாரிகள், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக அரசு வலியுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் முதியவர்கள் தான். வயது முதுமை காரணமாக அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகத் தான் இருக்கும். மேலும் அவர்கள் பல்வேறு வியாதிகளால்
ஏற்கனவே அவதிப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. இறப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள்.

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 5, 427 ஆக உயர்வு