பிரேசிலை திணற அடிக்கும் கொரோனா – 60 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

 

பிரேசிலை திணற அடிக்கும் கொரோனா – 60 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

உலகமே கொரோனாவில் பிடியில் சிக்கி, எப்படி தப்பிப்பது என விழி பிதுங்கி தவிக்கிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை கடுமையாக வீசி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 95 லட்சத்து  14 ஆயிரத்து 826 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 663 நபர்கள்.

பிரேசிலை திணற அடிக்கும் கொரோனா – 60 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 02 ஆயிரத்து 028 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,69,56,135 பேர்.

பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று தொடங்கியது முதலே பாதிப்பு மிக அதிகம். உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்தது பிரேசில். இந்தியாவில் கடுமையாக உயரவே தற்போது மூன்றாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவின் மொத்த  பாதிப்பு 60 லட்சத்து 88 ஆயிரத்து 4 பேர். இவர்களில் 54 லட்சத்து 45 ஆயிரத்து 095 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். ஆனால், 1 லட்சத்து 69 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பலன் அளிக்காது மரணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலை திணற அடிக்கும் கொரோனா – 60 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

நேற்று மட்டுமே பிரேசிலில் 16,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்போ 4 லட்சத்து 73 ஆயிரத்து 368 பேர். இவர்களில் 2 சதவிகிதத்தின் தீவிர சிகிச்சையில் உள்ளனர். பிரேசிலின் இறப்பு விகிதம் 3 சதவிகிதமாக இருக்கிறது.

ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று எனும் பார்த்தால் ஜூலை மாதம் 29 –ம் தேதிதான். அன்றைக்கு மட்டுமே 70,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் எனும் பார்க்கையில் நவம்பர் 11-ம் தேதி 47,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஜூலை 29-ம் தேதியன்று 1554 பேர் இறந்ததே ஒரே நாளில் அதிக மரணம். சமீபமாக எனும்போது நவம்பர் 12-ம் தேதி 926 பேர் இறந்திருக்கிறார்கள்.