Home தமிழகம் 'சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது'..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

‘சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது’..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் மொத்தமாக இருக்கும் 39,590 தெருக்களில் 9,000 தெருக்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 8,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் இதுவரை 8 லட்சம் மக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் மிக்க கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

'சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது'..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

'சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது'..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தொடர்ந்து, மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மக்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

'சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது'..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி...

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மனித சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கோரமாகவே இருக்கிறது. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு அடிப்படை...

நான் துருவித்துருவி பார்த்தேன்; எனக்கு எதுவும் தென்படவில்லை – ஆளுநர் உரை குறித்து ஓபிஎஸ் அடித்த கமெண்ட்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள்,கொள்கைகள் ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கையில் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. மொத்தத்தில் இது...

அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால், வேதனையில் பெண் தற்கொலை!

திருச்சி திருச்சி கே.கே.நகரில், அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி கே.கே.நகர் தொண்டைமான்...
- Advertisment -
TopTamilNews