சென்னை அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ் 56 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! – மக்கள் அதிர்ச்சி

 

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ் 56 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! – மக்கள் அதிர்ச்சி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 56 பேருக்கு ஒரே நாளில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கில் ஊரடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பரவி வந்த கொரோனா தற்போது மருத்துவர்கள் மத்தியிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ் 56 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! – மக்கள் அதிர்ச்சிசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 56 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை, முன்னணி ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க் உள்ளிட்டவை போதுமான அளவில் வழங்கப்படுவதாக அரசு கூறி வரும் நிலையில், ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால் மக்களை யார் காப்பாற்றுவார்கள் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.